![admk leaders sasikala speech audio](http://image.nakkheeran.in/cdn/farfuture/SHHRDOac7wA7q0sKcIFx22VJHVEt7k-B3Yo-6AlpMZs/1625249125/sites/default/files/inline-images/SASIKALA234_6.jpg)
அ.தி.மு.க.வின் நிர்வாகிகளுடன் சசிகலா நாள்தோறும் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். இது தொடர்பாக, சசிகலாவின் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று (02/07/2021) வெளியான சசிகலாவின் ஆடியோவில், "நான் மட்டுமில்லை, ஒரு சிறு குழந்தை சொன்னால் கூட எம்.ஜி.ஆர். கேட்பார். ஒரு கருத்தை சிறு குழந்தையிடம் கூட கேட்கலாம்; ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகக் கூறினேன். எங்கள் மீதுள்ள பிரியம் காரணமாக எம்.ஜி.ஆர். கருத்துகளைக் கேட்பார்" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜுடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடலில், "ஊரடங்கு ஒரு வாரத்தில் சரியாகி விடும் என்கிறார்கள். வரும் ஜூலை 5- ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில் அதன்பின் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று பார்ததுவிட்டு அனைத்து இடங்களுக்கும் வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.