Skip to main content

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- நாளை தீர்ப்பு?

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

A.D.M.K. General Assembly Case- Verdict tomorrow?

 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (17/08/2022) தீர்ப்பளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

கடந்த ஜூலை மாதம் 11- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஆகஸ்ட் 11- ஆம் தேதி அன்று தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

 

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து, இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

சார்ந்த செய்திகள்