Skip to main content

வாட்ஸ் அப் சேவைக்காக கூடுதல் கட்டணம்: இழப்பீடு வழங்க செல்போன் நிறுவனத்துக்கு உத்தரவு

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
வாட்ஸ் அப் சேவைக்காக கூடுதல் கட்டணம்: இழப்பீடு வழங்க செல்போன் நிறுவனத்துக்கு உத்தரவு

கோவை மாநகராட்சி பகுதியான தடாகம் சாலையைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி.  தனியார் நிறுவன ஊழியரான இவர் கோவையில் உள்ள தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்திடம் பிரிபெய்டு கார்டு வாங்கியுள்ளார்.

இவருடைய செல்லிடப்பேசி சாதாரண வகையைச் சேர்ந்ததால் அந்த செல்பேசியில், செயலி பதிவிறக்கம் செய்ய முடியாது. எனவே, தனக்கு குறுஞ்செய்தி மற்றும் செல்லிடப்பேசி மூலமாக வரும் விளம்பரத் தகவல்கள் தன்னுடைய எண்ணுக்கு வழங்க வேண்டாம் என்று அந்த நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த செல்பேசி நிறுவனம் குறிப்பிட்ட செல்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மற்றும் செல்லிடப்பேசி மூலமாக விளம்பரத் தகவல் பெற்றதாக விஜயலட்சுமியிடம் இருந்து ரூ.170 அதிகமாக அந்நிறுவனம் பிடித்துள்ளது. 

இதுகுறித்து விஜயலட்சுமி கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நுகர்வோர் மன்ற நீதிபதி செங்கோட்டையன் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ. 170-ஐ திரும்பச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும்,  மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 5 ஆயிரம்,  வழக்கு செலவுக்காக ரூ. ஆயிரம் என மொத்தம் ரூ. 6 ஆயிரத்தை  செல்லிடப்பேசி நிறுவனம் விஜயலட்சுமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்