Skip to main content

முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகல்! 

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

actors soori and vishnu vishal chennai high court judge

 

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்குப் பதிலாக, ஒரு நிலத்தைத் தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா  கூறியுள்ளனர்.

 

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து 2.70 கோடி ரூபாயைக் கூடுதலாகப் பெற்று மோசடி செய்து விட்டதாக, காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், காவல்துறையினர் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி'யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு,  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது  நீதிபதி, தான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும், இது தொடர்பாக பதிவுத்துறைக்கு உத்தரவிடுவதாவும் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்