மதுரை அவனியாபுரத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் புதிய உணவகத்தை திறந்து வைத்துவிட்டு மைக் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன், செய்தியாளர்களையும் சந்தித்தார். “இதை என்னோட குடும்ப நிகழ்வாத்தான் பார்க்கிறேன். மதுரைக்கு எப்ப வந்தாலும் ஒரு சூப்பரான மாஸான வரவேற்பு இருக்கும். அது ஒவ்வொரு முறையும் கிடைக்கிறது. அது ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கிறது. நான் சூரியண்ணன் கிட்ட சொன்னேன். வெஜிடேரியன் ரெஸ்டாரெண்ட். அம்மன் ஓகெ. மதுரைல இருந்துக்கிட்டு நான்- வெஜிடேரியன் ஹோட்டல் வைக்கலைன்னா எப்படிண்ணே? அசைவ சாப்பாடு சாப்பிடணும்ல.
கறி சாப்பாடு போடுங்கண்ணேன்னு கேட்டேன். இப்ப அதுவும் ஆரம்பிச்சிட்டாரு. அவரு வருஷ வருஷம் வெவ்வேறு ஏரியாக்கள்ல பிராஞ்சுகளை தொடங்கிட்டே இருக்கணும். நான் வந்து திறந்து வச்சிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படறேன். இது நடக்கும். போனவாட்டி நடந்தப்ப அன்னைக்கி சொன்னேன். அவங்க இன்னைக்கு நிகழ்த்திக் காட்டிட்டாங்க. இது அவங்களோட கடுமையான உழைப்புத்தான். ஒரு டீ கடை வச்சி.. அது பல டீ கடைகளா மாறி.. அதுக்கப்புறம் வெஜிடேரியன் ரெஸ்டாரெண்டா மாறி..
இப்ப நான்-வெஜ் ரெஸ்டாரெண்டா மாறுதுன்னா... உழைப்பு இல்லாம சாத்தியமே இல்ல. உழைக்கிறோம்; என்னைக்குமே நீங்க (ரசிகர்கள்) தூக்கிவிடாம விட்டதே இல்ல. இந்த மேடைல இருக்கிற நாங்க எல்லாருமே அப்படித்தான். உங்களோட கைதட்டல்கள்ல வந்தவங்கதான். அடுத்த வருஷம் இன்னொரு பிராஞ்சு அண்ணே. இடத்தைப் பார்த்து வைங்க. டேட் சொல்லிருங்க. வந்துடறேன். இந்த விசிலுக்கும் கைதட்டலுக்கும் பெரிய நன்றி.” என்றார் சிரித்த முகத்துடன்.