Skip to main content

நடிகர் அல்வா வாசு காலமானார்

Published on 18/08/2017 | Edited on 18/08/2017

நடிகர் அல்வா வாசு காலமானார்


மதுரை அலங்காநல்லூர் ஏர்ரம் பட்டியை சேர்ந்த ராமரின் 3வது மகன் வாசுதேவன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் B.A. பட்டதாரி வரை படித்துள்ளார். இவர் படிக்கும் காலத்தில் கதை வசனம் எழுதி தன் உடன் உள்ள மாணவர்களை வைத்து நடித்து காட்டுவார். சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தில் சென்னையில் தனது நண்பரின் நன்பர் R.P.திலக் என்பவரை பார்த்து அவருடன் பல முண்ணனி டைரக்டர்களிடம் உதவியாளராகவும் நடிகர், நடிகை, ஆகியோருடன் நடித்து தமிழக மக்களை சிரிக்க வைத்தார். 

சென்னை சாலி கிராமத்தில் 40 வருடங்களாக மனைவி அமுதாவுடனும் மகள் கிருஷ்ணவேணி வயது 12 உடனும் வாழ்ந்து வந்தவர். இப்போது முடியாமல் கடந்த 5 மாத காலமாக சென்னையிலும், மதுரையில் மருத்துவம் செய்து வருகிறார். தற்போது முனிச் சாலையில் உள்ள வீட்டில் மூச்சு திணறல் நோயால் அவதிபட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தார். தமிழகத்தை சிரிக்க வைத்த எனது கணவரை திரை துறையை சார்ந்தவர்கள் திரும்பி பார்க்க மறுக்கிறார்கள். தனது ஒரு மகளை வைத்து என்ன செய்யப் போகிறேன் என அவரது மனைவி கூறி வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அவர் காலமானார். 

-ஷாகுல்

சார்ந்த செய்திகள்