நடிகர் அஜித் சிலை திறப்பு விழா
நடிகர் அஜித்குமார் திரைதுறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ரூ.1 லட்சம் செலவில் சிலை அமைத்துள்ளனர். பைபர் மெழுகினால் மார்பு அளவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர் இமான்அண்ணாச்சி கலந்து கொண்டு அஜித்குமார் சிலையை திறந்து வைத்தார். இதில் நடிகை டார்லிங் மற்றும் ஏராளமான அஜித்குமார் ரசிகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், அஜித்குமார் உருவபடத்துக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.