Published on 23/06/2018 | Edited on 23/06/2018

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
தமிழ்நாட்டில் விவசாயப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் உரிமையை ரத்து செய்து, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்றுக் கொள்ள தமிழக கூட்டுறவுத் துறை உத்திரவிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். உடன் அனைவருக்கும் நிபந்தனையின்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
விவசாயிகளுக்கு4% வட்டியில் தேசீய மயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகள் நகை கடன் வழங்கும் போது, கூட்டுறவு வங்கிகள் மட்டும் 9.50% வட்டி நிர்ணயம் செய்வது நியாயமா? உடன் இதனை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.