ஏடிஎம்மில் தவறவிட்ட 7 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கபட்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது
ஈரோடு மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முத்து (60). இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்திற்கு ரூ.7 ஆயிரம் பணம் எடுக்க சென்றார். ஏ.டி.எம் கார்டை சொருகி பின் எண்ணை பதிவு செய்தும் பணம் வராததால் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
பின்னர் அதே ஏ.டி.எம் மையத்திற்கு சிறிது நேரத்தில் ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பணம் எடுக்க வந்தார். ஏ.டி.எம் எந்திரத்தை பயன்படுத்த முயன்ற போது ரூ.7 ஆயிரம் பணம் இருப்பதை பார்த்தார். யாரோ பணத்தை தவற விட்டதை உணர்ந்த பிரபாகரன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நேராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று வரவேற்பறையில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் அந்த பணத்தை கொடுத்து விவரத்தை கூறினார். இதையடுத்து போலீசார் நடந்த விவரத்தை முத்துவிடம் கூறி அவரிடம் தவறவிட்ட பணத்தைத் திரும்பப் படைத்தனர். பணத்தை எடுத்து வந்து திரும்ப ஒப்படைத்த பிரபாகரன் செயலை போலீசார் பாராட்டினர்.