Published on 05/09/2024 | Edited on 05/09/2024
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 69- பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில், கலைஞரின் களவு இல்லம் திட்டம் குறித்து, சின்னசேக்கனூர், தெள்ளூர், ஜமால்புரம், ஊசூர், புலிமேடு ஆகிய பகுதிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஊசூரில் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி " வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், டெக்கு காய்ச்சலுக்கென்று வேலூர் அடுக்காம்பாறை அரசு மருத்துவமனையில் 10 தனி பெட் வசதிகள் தாயார் நிலையில் உள்ளதாகவும், வேலூர் மாவட்டத்தில் மொத்தமாக 69-பேர் டெக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார்.