63 குழந்தைகள் உயிரிழந்தது போன்று மீண்டும் நிகழக்கூடாது: கமல்ஹாசன்
உத்திரப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்தது போன்று மீண்டும் நிகழக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜன் விநியோகம் திடீரென தடைபட்டதே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த உடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.