Skip to main content

டெண்டர்விட்டு 6 மாசமாச்சு.. வகுப்பறைகள் கட்டல.. மாணவர்கள் போராட்டம்!!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டுவதற்கான ஒப்பந்தம் கடந்த ஒருவருடத்திற்கும் முன்பாகவே போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுநாள்வரை வகுப்பறைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு நினைவூட்டப்பட்டும் நடவடிக்கை இல்லை. போதிய வகுப்பறை இல்லாமல்  மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

6 months away from the tender ... students struggle !!

 

எனவே, கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு இதுநாள் வரை வழங்படாமல் உள்ள பேருந்து பயண அட்டை, விலையில்லா சைக்கிள், மடிக்கணினி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிக்கு குடிநீர், கழிப்பறையை பாராமரித்தல் உள்ள அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைளை வலியுறுத்தி இந்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

 

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.குமாரவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி, துணைச் செயலாளர் ஜனார்த்தனன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.இளமாறன், ஒன்றிய நிர்வாகி சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்