Skip to main content

காலி மனைகளை சுத்தம் செய்ய தவறினால் 6 மாத கால சிறை: புதுச்சேரி ஆட்சியர்!

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
காலி மனைகளை சுத்தம் செய்ய தவறினால் 6 மாத கால சிறை: புதுச்சேரி ஆட்சியர்!

காலி மனைகளை சுத்தம் செய்ய தவறினால் 6 மாத கால சிறை தண்டனையோ அபராதமோ வழங்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"புதுச்சேரியில் டெங்கு கொசு ஒழிப்பு புகை தெளிப்பான் போதுமானதாக இல்லை என்பதால் கால்நடைத்துறையிலிருந்து 8 புகைதெளிப்பு இயந்திரங்கள் பெறப்பட்டுள்ளது. 4000 நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் விழிப்புணர்வில் பயண்படுத்தப்படவுள்ளனர்.

காலி மனைகளை சுத்தம் செய்ய தவறுவோர் மீது கிரிமினல் நடவடிக்கையாக 6 மாத சிறையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்