5 சவரன் நகை, 30 ஆயிரம் பணம் கொள்ளை
சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (60). சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு தனியார் நிறுவன ஊழியராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை, 30 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிந்தது.