திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில்நடைபெற்ற ஆய்வின்போது ஐந்து போலி சிலைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொிவித்துள்ளார்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் ஐந்தாவது கட்டமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரும், மத்திய தொல்லியல் துறையினரும் இணைந்து சிலைகளின் தொன்மைதன்மை குறித்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று திருவாரூரில் நடைபெறும் ஆய்வு பணியினை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் திடிர் ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது. " பாதுகாப்பு மையத்தில் 4356 சிலைகளில் இன்றுவரை 1897 சிலைகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிலைகளில் ஐந்து சிலைகள் போலியானது எனதெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும் இந்து அறநிலையத் துறையின்இணை ஆணையர் தென்னரசு ஆய்வுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதுகுறித்து விசாரணை கமிஷனில் தெரிவிக்கப்படும் எனவும் அவரை ஒத்துழைப்பு தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்".
மேலும் இன்றைய ஆய்வின் போது ஒருசிலையில் அடி பகுதியில் அந்த சிலை செய்யப்பட்ட வருடம் போன்ற அனைத்து விபரங்களும் பொறிக்கபட்டிருந்ததாகவும், இந்த மாதிரி செய்யபட்ட சிலைகளை யாரும் திருடி விற்பனை செய்ய முடியாது என்றும் தொிவித்தார்.