புவனகிரி அருகே பு. உடையூர் கிராமத்தில் ஜெயகோபாலன் என்பவர் 7 மாடுகள், 3 கன்று குட்டிகள் வளர்த்து வருகிறார். வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் மாட்டு கொட்டகையில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால் சாம்பிராணி புகை வைத்து விட்டு வயலுக்குச் சென்று உள்ளார். சாம்பிராணி புகை தீ மூட்டம் அதிகமானதால் அருகிலிருந்த வைக்கோல் போரில் தீ பற்றியது.
இதனால் வைக்கோல் முழுவதும் பற்றி எரிந்தது. இந்நிலையில் வைக்கோல் போருக்கு அருகே கட்டி வைக்கப்பட்ட 7 மாடுகள், 3 கன்று குட்டிகள், கொழுந்து விட்டு எரிந்த தீயில் அகப்பட்டு கதறியது. அதில் 5 மாடுகள், 3 கன்று குட்டிகள் தீயில் கருகி பலியானது. இதில் 2 மாடுகள் மட்டும் தீக்காயங்களுடன் உயிர் தப்பியது. இதனையறிந்த மாட்டின் உரிமையாளர் ஜெய கோபாலன் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மாடுகளும், கன்று குட்டிகளும் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.