Skip to main content

41.9 கோடி முடக்கம்; 81 லட்சம் பறிமுதல் - அமலாக்கத்துறை தகவல்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

'41.9 crore frozen; 81 lakh confiscated'-Enforcement Department information

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையின் அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சோதனை நடத்தப்பட்டது.

 

தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு நேற்று இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 81.7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 லட்சம் மதிப்புள்ள பிரிட்டிஷ் பவுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த 41.9 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்