30 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
கோயம்பேடு மளிகை பொருட்கள் மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று அந்த மார்க்கெட்டில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதை பறிமுதல் செய்தனர். பின்னர், போதைப் பொருள் விற்ற வியாபாரி கோயம்பேடு சேமாத்தமன் நகர் 2வது செக்டாரை சேர்ந்த நியாஸ் அகமது (23) எனபவரை கைது செய்தனர்.