Skip to main content

3 இலட்சம் தொடர் பனை விதைகள் நடும் விழா!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

3 lakh series palm seeds planting ceremony!

 

 

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் மூன்று இலட்சம் பனை விதைகள் இயக்கம் சார்பில் தொடர் பனை விதை விதைப்பு இயக்கத்தின் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை கிராம இளைஞர்கள், கிராம ஊராட்சி முன்னேற்றக்குழு, பெண்கள் சுய உதவிக்குழுவினர் பங்கேற்று பனை விதைகளை கடுகூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நடவு செய்தனர். 

 

இதுகுறித்து மூன்று இலட்சம் பனை விதைகள் இயக்கம் சார்பாக தெரிவிக்கையில் நேர்மைக்கு பெயர் பெற்ற குடிசை வீட்டில் வாழும் 70 வயதான பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது கிராமத்தை தத்து எடுத்து இந்த விழாவை நடத்துகிறோம் என்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் கலந்துகொண்டார். கடுகூர் கிராம ஊராட்சி தலைவர் தர்மலிங்கம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து முன்னிலை வகித்தார். பச்சை மனிதர் தங்க சண்முக சுந்தரம் 3 இலட்சம் பனை விதை விதைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்வீட் பாய்ஸ் ஒருங்கிணைப்பாளர் இளவரசன், விவசாய சங்க நிர்வாகி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிராமத்தை சேர்ந்த பெண்கள் இளைஞர்கள் பள்ளி மாணவ மாணவிகள் 2,000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்