சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 3 பேர் கைது!
மதுரை மாவட்டம், மேலூர் பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலூர் பேருந்து நிலையம், மார்கெட் பகுதி மற்றும் சொக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சக்கரவர்த்திக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, அவர் தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் மதுபாட்டிகள் விற்பனை செய்த நாச்சான், அந்தோணிச்சாமி மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 55 மதுபாட்டில்களை மேலூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், அதேபோல் கீழவளவு அருகே செம்மனிபட்டி பகுதியில் 130 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த கீழவளவு காவல்துறையினர் தப்பியோடிய ரவி என்பவரை தேடி வருகின்றனர்.
- முகில்