மெட்ரோ ரெயில் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி
பண்டிகை காலம் வருவதையொட்டி சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயிலை அனைத்து தரப்பினரிடமும் பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் அக்டோபர் 31–ந்தேதி வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் வாங்கும் டிக்கெட், பயண அட்டை, டோக்கன் ஆகியவற்றுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.