சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 34 மீட்பு மறுவாழ்வு வாகனங்களின் சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர், காயமுற்ற வன உயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க புதிய வாகனங்களின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
அதேபோல் காலநிலை மாற்றத்துறை சார்பாக, தொழில் முதலீடு மற்றும் ஊக்குவிப்பு வர்த்தகத் துறை சார்பாக கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழில் பூங்காவிற்கு இரண்டு கட்டங்களாக 20 எம்எல்டி கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை எதிர்சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலையை 187.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், காலநிலை மாற்றத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் பங்கு பெற்றனர். 20 எம்எல்டி கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலை மூலமாக நீர் மாசுபட்டு வெளியில் விடப்படுவது குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.