Published on 30/10/2018 | Edited on 30/10/2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தனபால் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தநிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரனும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்ததை அடுத்து மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு முடிவெடுத்தது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தநிலையில் தற்போது அதிமுக கொறடா ராஜேந்திரனும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.