Skip to main content

“திருச்சியில் 157 வாக்கு சாவடிகள் பதட்டமானவை”  - ஆட்சியர் சிவராசு

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

"157 polling booths in Trichy are tense" - Collector Sivarasu

 

தமிழ்நாடு முழுக்க பிப். 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் மொத்தம் 1,262 வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறும்.

 

திருச்சி மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் என்று கண்டறியப்பட்டவை 157. இங்கு நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகுச்சாவடிகளுக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 1518 இ.வி.எம் கருவிகள் திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. கண்காணிக்க 20 தேர்தல் உள்ளூர் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரச்சரத்தில் இருசக்கர வாகனம் அனுமதி கிடையாது. நகராட்சி தேர்தலில் மொத்தம் வாக்காளர்கள் திருச்சியில் 10,58,674.

 

டெல்டா வகை வைரஸ் இன்னும் உள்ளது. டெல்டா வகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூ செல்வோர்கள் எண்ணிக்கை திருச்சியில் உள்ளது. எனவே, மக்கள் பாதுகப்பாக இருக்க வேண்டும்”  என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்