Skip to main content

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் 15.50 லட்சம் ரூபாய் பறிமுதல்!

Published on 08/07/2022 | Edited on 08/07/2022
 15.50 lakh rupees seized from former minister Kamaraj's house!

 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும், தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக புகார் பெறப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

விசாரணையின் போது, அவர் 01/04/2015 முதல் 31/03/2022 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுய லாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூபாய் 58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாகத் தெரியவந்தது. தஞ்சையில் 38, சென்னை-6, தஞ்சை-4, திருச்சி -3, கோவையில் ஒரு இடம் என மொத்தம் 52 இடங்களில் சோதனை நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், 15.50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கி பெட்டக  சாவி, ஐபோன், கணினி, பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க், ஆவணங்கள், 41.06 லட்சம் ரூபாய்,963 சவரன் நகை, 23,960 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்