முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்பட 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (25/07/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துக் கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், ஆர்.ராஜலட்சுமி மற்றும் முகம்மது அலி ஜின்னா, பாரதியார், சிவா, அண்ணாதுரை, ராஜ்மோகன், ராமச்சந்திரன், ஸ்ரீதரன் ராவ், சுஜைனி, விஜய் பாரத், மோகனப் பிரியா, மோகன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.