Skip to main content

எஸ்.பி.வேலுமணி இடங்களில் ரூபாய் 13.08 லட்சம் பறிமுதல்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

13.08 lakh confiscated from SP Velumani places!

 

தமிழகத்தில் இன்று (10/08/2021) காலை முதல் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவை 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது. 

 

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இருந்து ரூபாய் 13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூபாய் 2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஹார்டு டிஸ்குக்கள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனிடையே, எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனை நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்