Skip to main content

'10 சதவிகித போனஸ் போதுமானதல்ல...'-பாமக ராமதாஸ்

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

 '10 percent bonus is not enough..'-Bamaka Ramadoss

 

போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு  10% (ரூ.8400)  மட்டும் தான் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெ ளியிட்ட டிவிட்டர் பதிவில், ''2021-22 ஆம் ஆண்டில் கரோனா பரவல் காரணமாக  அரசு பேருந்துகளின் இயக்கம் மிகக் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் அதையே கூறி போனஸ் தொகையை 10% என்ற குறைந்த அளவிலேயே வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்கப்பட வேண்டிய ரூ.10,000 முன்பணத்தை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை. தீபஒளிக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்பணத்தை தாமதிக்காமல்  உடனடியாக வழங்க வேண்டும்.
 

கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு குறைந்தது 20% ஆக போனசை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்