திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்துக்களின் கோயில்களை இடிக்க வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய வகையில் திருமாவளவன் பேசியதாகக் கூறி தமிழகம் முழுவதும் அவரைக் கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவன் தலையை துண்டிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என இந்து முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் கோபிநாத் அறிவித்தார்.
இதனிடையே தான் அப்படி கூறவில்லை என்றும். தன் பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவதாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார். இந்து முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் கோபிநாத்தைமீது நடவடிக்கை எடுக்கும்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் காரமடை அருகே இருந்த கோபிநாத்தை, திருப்பூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் கோபிநாத் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.