கடந்த 20ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த நாள் 21-ம் தேதி கரூர் மற்றும் நாமக்கல்லில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். 22ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) சேலத்தில் உள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட சிலையை வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் கலந்து கொண்டார். விநாயகர் சிலைக்கு தீபாரானை காட்டிய எடப்பாடி பழனிசாமி தோப்புக்கரணம் போட்டு வழிபட்டார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் போட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ''எவ்வினையையும் தீர்க்கும் விநாயகர், இவ்வினையையும் தீர்க்க... சேலத்தில் எனது குடும்பத்துடன் வழிபட்டேன்.... விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.