Published on 13/07/2019 | Edited on 13/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் தினகரன் பிரிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 6 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். மேலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தார். தினகரன் கட்சியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரன் கட்சிக்கு மேலும் சரிவை ஏற்படுத்தியது.
மேலும் அமமுகவில் அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா அவரும் அதிமுகவில் இணைந்தார். தினமும் தினகரன் கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி மாற்று கட்சியில் இணைந்து வரும் நிலையில் அ.ம.மு.க மகளிர் அணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதனால் தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.