நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளை வென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டுவிட்டர் கணக்கை பின்பற்றுபவர்களை விடவும், படுதோல்வியை அடைந்த பாஜகவின் டுவிட்டர் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை சுமார் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை 96 ஆயிரம் பேர். அதேநேரம் பாஜகவை பின்பற்றுவோர் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

அதில், திமுகவை சீண்டும் விதமாக, ஸ்டாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து உள்ள பாஜக தமிழக ட்விட்டர் தளம், "இனிய விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்" என்று சொல்லி, கிண்டல் செய்துள்ளது. சி சி அறிவாலயம் என்று திமுகவின் கட்சி அலுவலகத்திற்கு டேக் செய்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற சீண்டல்களுக்கு, கர்நாடக பாஜக ட்விட்டர் தளம், புகழ்பெற்றது. எனவே அகில இந்திய அளவில் கர்நாடக பாஜக ஐடி விங் பேமஸ் ஆனது. இப்போது தமிழக பாஜக ஐடி விங்கும் அதுபோன்ற சீண்டல்களை கையில் குறிப்பிடத்தக்கது.