இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,விசிக,மற்றும் சில கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிறு வணிகர் மீட்பு மாநாடு நடந்தது.அப்போது விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது திமுக மற்றும் அதிமுக கூட்டணியின் வித்தியாசத்தை பற்றி கூறினார்.

அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதுமே கொள்கையுடன் தான் தேர்தலை சந்திக்கிறது என்றார். மேலும் விசிக கட்சி கூட்டணி வைத்திருப்பது நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் அல்ல என்றும் திமுக கட்சி எப்போதும் நோட்டுக்கு இடம் கொடுக்காத இயக்கம் என்றும் கூறினார்.பின்பு நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூட்டணி வைக்க வேண்டுமென்றால் எடப்பாடி பழனிச்சாமி உடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அதற்காக சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்றும் பேசினார்.