சென்னையில் கடந்த மாதம் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில் தங்க தமிழ்செல்வன் பேசுகையில்,
இந்திய துணைக் கண்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை 3வது பெரிய கட்சியாக உருவாக்கியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழாவுக்கு எளிய தொண்டர்களாகிய எங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார். நேற்று (சனிக்கிழமை) சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிற இந்த சூழலில் தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பை ஏற்று மிகப்பெரிய தலைவரான திமுக தலைவர் வந்து சிறப்பிததற்கு பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.
அதிமுகவில் இருந்தேன் தங்க தமிழ்ச்செல்வன். நாடாளுமன்றத் தேர்தலில் 6 ஆயிரம் ஓட்டில் என்னை தோற்கடிக்கின்றனர். ஜெயலலிதா காலமான பிறகு இநத ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறோம். வெளியே வந்த பிறகு ஒரு கட்சிக்குப்போகிறோம். மக்கள் அந்த கட்சியை விரும்பவில்லை. டிடிவி தினகரன் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை. விரும்பவில்லை. செத்தப்பாம்பை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதைப்பற்றி பேசுவது தவறு என்று நினைக்கிறேன்.
போன மாதம் 27ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தேன். தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர்களை கலந்துகொண்டு கடந்த 10ஆம் தேதி ஸ்டாலினை பார்த்தேன். இணைப்பு விழா நடத்த வேண்டும். நீங்கள் அதற்கு தேதி கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அப்போது அவர், சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கிறது. 10 நாள் இருக்கிறது. அதற்குள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். இதுதான் தலைவனுக்கு அழகு. ஒரு கூட்டம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்று ஸ்டாலினுக்கு தெரியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1952ல் நேரு இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும்போது, 543 நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கு இந்தியாவின் செலவு 143 கோடி. ஆனால் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற 500 கோடி செலவு செய்திருக்கிறார்கள். இவ்வாறு பேசினார்.