Published on 01/10/2018 | Edited on 01/10/2018
![Interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/BP00yksAB7OeCtkgjy9Uy35WQ4H2nNL-CgZjoZ1RoE4/1538418338/sites/default/files/inline-images/M.%20Thambi%20Durai%20300.jpg)
நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், 2014 நாடாளுமன்ற தேர்தலை போல, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது என்ற முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் கருத்தில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வலிமை அ.தி.மு.க.வுக்கு உள்ளது என்றார்.
‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து, தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்றார்.