Skip to main content

நாங்களே தனிப்பெரும் கட்சி - பீகாரில் போர்க்கொடி தூக்கும் தேஜஸ்வி யாதவ்

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

பீகார் மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற எங்களுக்கே ஆட்சி அதிகாரம் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி போர்க்கொடி தூக்கியுள்ளார்.

 

tejaswi

 

2015ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மகாகத்பந்தன் என்ற கூட்டணியின் கீழ் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் பா.ஜ.க. உள்ளிட்ட பிற கட்சிகளும் தேர்தலைச் சந்தித்தன. இந்தத் தேர்தலின் முடிவில் மகாகந்த்பந்தன் கூட்டணி 178 தொகுதிகளுடன் மகத்தான வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதீஷ்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், சென்ற ஆண்டு மகாகத்பந்தன் கூட்டணியை முறித்துக்கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணியமைத்த நிதீஷ்குமார் பீகாரின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார்.

 

 

இந்நிலையில், பீகார் சட்டசபைத் தேர்தலில் 80 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க ராஷ்டிரிய ஜனதா தளம் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பீகார் மாநிலத்தின் மதிப்பிற்குரிய ஆளுநரை நேரில் சந்தித்து, தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் ஆட்சியமைக்கும் உரிமையை கோர இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்