Skip to main content

டாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம்? ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக்கை மூடிய பிறகு, வேறுவித ஆபத்து தமிழகத்தைச் சூழ்ந்து கொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது,சென்னையைச் சுற்றிப் பல இடங்களில் கள்ளச்சாராயம் சப்ளை செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தென்மாவட்டங்கள் வரை தற்போது அது பரவியிருப்பதாகக் கூறுகின்றனர். பெரும் பாலும் ஆங்காங்கே இருக்கும் ஆளும்கட்சிப் பிரமுகர்கள் இந்தப் பிஸ்னஸில் வரிந்து கட்டிக்கொண்டு இருப்பதாகக் கூறுகின்றனர்.சில இடங்களில் போலி மதுபானத் தொழிற்சாலைகளும் விறுவிறுப்பாக நடத்தப்படுகிறது. உயிருக்கு உலை வைக்கக் கூடிய ’ரெக்டிஃபைடு மெத்தனால்’ என்னும் ஸ்பிரிட்டை தண்ணீர் கலந்து, அப்படியே கள்ளச்சாராயமாக விற்பதாகவும் கூறுகின்றனர்.
 

admk


 

மேலும் சென்னையிலும் இந்த ரெக்டிஃபைடு மெத்தனால் குடிமகன்களைத் தள்ளாட வைத்து கொண்டிருக்கிறது என்கின்றனர். இப்படிப்பட்ட டேஞ்சரஸ் சரக்குகள் காய்கறி மற்றும் பால் வண்டிகள் மூலம் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வியபாரத்ததைத் தடுக்க முனைந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரை, சாராயக் கும்பல் துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் அதிர வைத்துள்ளது. பல இடங்களிலும் ஆளுந்தரப்பினர்தான் சரக்கு சப்ளை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.இது தொடர்பான ரிப்போர்ட் டி.ஜி.பி. திரிபாதி டேபிளில் வைக்கப்பட்டிருக்கிறது.இந்த விஷயத்தை அறிந்த அவர் சாராய சப்ளையைக் கட்டுப்படுத்த லோக்கல் சப்ளை பார்ட்டிகள் யாரையாவது என்கவுண்டர் பண்ணி, சாராயக் கும்பல்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமா என்கின்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் காக்கிகள் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்