தமிழகம் முழுவதும் ஸ்டாலின் ஊராட்சி சபை தமிழகம் முழுவதும் நடத்திக்கொண்டு வருகிறார். கரூர் அரவாக்குறிச்சி பகுதியில் ஊராட்சி சபை நிகழ்ச்சி முடித்து திமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் நடந்த இந்த கூட்டம் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. ஒரு பூத் கமிட்டியின் 30 உறுப்பினர் என மொத்தம் 252 பூத் கமிட்டிகளின் உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை (பாஸ்) வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனி அடையாள எண் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பெயர் வாசி்க்காமல் அடையாள எண்ணை சொன்னவுடன் அந்த பூத் கமிட்டி உறுப்பினர் எழுந்து பேசினார். இதனால் பெயர், கிளை, ஊர் குழப்பம் இன்றி நேர்த்தியாக திட்டமிடப்பட்டு புதுமையான முறையில் இந்த கூட்டம் நடந்தது. வித்தியாசமாக நடந்த இந்த கூட்டத்தை ஸ்டாலின் கவனமாக பார்த்து செந்தில் பாலாஜியை பாராட்டினார்.
இதே போல மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி கூட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் உறுப்பினர்களுடன் ஸ்டாலினும் நின்றபடியே உணவருந்தினார். திமுகவின் நமக்குநாமே திட்டம் போன்றவற்றை வடிவமைக்கும் கலை என்பவரும் மாநில பிரதிநிதியாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சமீபத்தில் திருச்சி வந்திருந்த ஸ்டாலின் நவல்பட்டு ஊராட்சி கூட்டத்தில் பேசும் போது மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி வழங்கும் போது பல மணிநேரம் நின்று கொண்டே வழங்குவேன். எல்லோரும் தேவையான செக்கை நானே நேரடியாக நின்று வழங்குவேன். ஆயிரக்கணக்கில் பயனாளிகள் இருப்பார்கள். இருப்பார்கள் அவர்கள் எல்லோக்கும் எண் கொடுத்திருப்போம், பெயரோ ஊரோ எதையும் தெரியாது. அந்த எண்ணை சொன்னவுடன் வரிசையாக வருவார்கள் அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுத்தோம் என்றார்.
அதை அப்படியே உள்வாங்கி தன்னுடைய அரவாக்குறிச்சியில் அதே பாணியில் செய்து காட்டி ஸ்டாலினிடம் பாராட்டையும் பெற்றார் செந்தில்பாலாஜி.