Skip to main content

காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணி அமைத்திருக்கலாம்! - மம்தாவின் வாக்கு பலித்தது  

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முன்னிலையில் உள்ள பா.ஜ.க.வுக்கு மேற்கு வங்கம் மாநில முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

mamata

 

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், பலரும் அக்கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், மேற்கு வங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோற்றவர்கள் மீண்டும் வெற்றியை நோக்கி போராடுங்கள். காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஒருவேளை கூட்டணி அமைத்திருந்தால் முடிவுகள் இன்னும் மாறுபட்டு வந்திருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

 

 

இதுவொரு புறமிருக்க, காலையில் இருந்து முன்னிலை வகித்த பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்குப் போதுமான 113 தொகுதிகளைப் பெறமுடியவில்லை. இதில் திடீர் திருப்பமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அழைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க சம்மதம் என ம.ஜ.த. தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்