Skip to main content

“செந்தில்பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராவார்” - கரூர் சின்னசாமி

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
 

senthilbalaji


நேற்று அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் கலந்துகொண்ட மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி பேசும்போது, 

“உங்களுடைய வாக்கு நூற்றுக்கு நூறு உதயசூரியன் சின்னத்துக்குதான் என்று நம்பிக்கை அளித்ததற்காக எனது நன்றி. கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளார். அதுபோலவே, சகோதரர் செந்தில் பாலாஜியையும், அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில், நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அப்பொழுது செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்பார். அப்பொழுது உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.” எனக் கூறினார். ஸ்டாலின் விருப்பமனுக்கள் பெறும் முன்னரே செந்தில்பாலாஜிதான் அரவக்குறிச்சி வேட்பாளர் என மேடையிலேயே அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்