Published on 21/06/2019 | Edited on 21/06/2019
பாராளுமன்றத்தில் இன்று (21.6.2019) மாலை 2.20 மணியளவில் நேரமில்லா நேரத்தில் (ZERO HOUR) திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் பேசினார்.

அப்போது, ''தமிழ்நாட்டில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குடிதண்ணீர் பஞ்சமும், பற்றாக்குறையும் நிலவுகிறது. கடந்த 6 மாதமாக போதுமான மழை இல்லை. காவேரி நதி நீரும் கிடைக்கவில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத அவலநிலை நிலவுகிறது. இந்த பிரச்சனையை தேசிய இயற்கை பேரழிவு போல் கருதி, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உடன் செயல்பட வேண்டும். தேசிய பேரழிவாக இதனை அறிவித்து, தேசிய பேரழிவு நிர்வாக நிதியிலிருந்தும், பிரதமர்நிவாரண நிதியிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டார்.