Published on 11/01/2021 | Edited on 11/01/2021

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.1.2021) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, எம்.எல்.ஏ., அந்தியூர் செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., தி.மு.க. சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி., வழக்கறிஞர் விக்டர் ஆகியோர் உடனிருந்தனர்.