கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தக் காலகட்டத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக, இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் முக கவசம் அணிவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே... ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே! - முகத் வேம்பயம், மலையாளக் கவிஞர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி அறிவுறுத்தியவாறு சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் மதித்து நடக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் இது நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவது ஏன்? எவ்வாறு அணிய வேண்டும்! என்பது குறித்த விளக்கங்களையும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கதான் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.