தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிளுக்கான இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 16ஆம் தேதி அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். இந்த நிலையில் இன்று காலை அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
வடசென்னை - சந்தான கிருஷ்ணன்,
அரக்கோணம் - பார்த்திபன்,
வேலூர் - பாண்டுரங்கன்,
கிருஷ்ணகிரி - கணேசகுமார்,
தருமபுரி - பழனியப்பன்,
திருவண்ணாமலை - ஞானசேகர்,
ஆரணி - செந்தமிழன்,
கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன்.
திண்டுக்கல் - ஜோதிமுருகன்,
கடலூர் - கார்த்திக்,
தேனி - தங்கதமிழ்செல்வன்,
விருதுநகர் - பரமசிவ ஐய்யப்பன்,
தூத்துக்குடி - புவனேஸ்வரன்,
கன்னியாகுமரி - லெட்சுமணன்
தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.