Skip to main content

நாங்க இங்க இருக்க காரணம் ஓபிஎஸ் மகன் தான்... ரவீந்திரநாத் குமாரின் அதிரடி நடவடிக்கை!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. 180- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,413 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பதிப்பில் இருந்து 1,08,388 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536லிருந்து 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 519 பேருக்கும், வெளிநாட்டினர் 43 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

opr



இந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் மலேசியாவில் படித்து கொண்டு இருந்தவர்கள், வேலைபார்ப்பவர்கள் இந்தியாவுக்கு வர முடியவில்லை. எமிகிரேஷன் முடிந்துவிட்டதால் மலேசியாவுக்குள்ளும் போக முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு வாரமாக கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு உதவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக பிரபாகரன் என்பவர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து தமிழக அரசின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் அவர்கள் அனைவரும் இந்தியா அழைத்துவரப்பட்டனர். 113 பேர் சென்னை விமானநிலையம் வந்து இறங்கினர். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் சிறப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தங்களை மீட்க உதவிய ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு பிரபாகரன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் , " நாங்கள் எல்லாம் தற்போது இங்கே இருக்கக் காரணம் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்தான். எங்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுத்த அவருக்கு மனமார்ந்த நன்றிகள்" என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்