Skip to main content

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணியா? சீமான் பதில்

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 2019 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அந்த சின்னத்தை அறிமுகம் செய்தார். 

 

seeman



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும் அதுபோன்று கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
 

மயிலை மாங்கொல்லையில் 23-ந் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. நான் 25-ந்தேதி முதல் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளேன் என்றார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்