Skip to main content

சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் அளித்த மக்கள் கூட்டமைப்பு (படங்கள்)

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த 3 மாதங்களாக குமரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவை அறிந்து மக்கள் கூட்டமைப்பு கட்சி நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது.

அதன்படி கரோனோ நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியை தேர்ந்தெடுத்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் மாஸ்க் வழங்கினார்கள். மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்றோருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. 

 

இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னையிலிருந்து காலி செய்து குடும்பம், குடும்பமாக நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் மருத்துவ சோதனைக்கு பின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

 

இந்த குடும்பங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவற்றையும் மக்கள் கட்சி கூட்டமைப்பு தலைவர் டாக்டர் பி சிவகுமார் தலைமையிலான அவரது குழுவினர் தற்போது செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்