Skip to main content

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்; 2வது நாளாக இன்று ஆலோசனை

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Leaders of Opposition meeting; 2nd day counseling today

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

 

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்றும் (18.7.2023) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்க உள்ளார். இந்நிலையில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது. இன்று காலை 11:00 மணிக்குத் தொடங்கும் கூட்டம் பிற்பகல் 3.30 வரை நடைபெறும்.

 

இதில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்துவது, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுதல், கூட்டணிக்குத் தனிச் செயலகம் அமைத்தல் பற்றி ஆலோசிக்கப்படும், கருத்தரங்கங்கள் நடத்துவது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்