அரசியலில் கட்சிப் பதவிகளில் என்பதுதான் மிக கௌரவமாகவும் அந்தஸ்தும் அடையாளமாகவும் அரசியல்வாதிகள் நினைப்பார்கள். அரசியல் கட்சிப் பதவிகளை அடைவதற்கு நேரம் காலம் பார்க்காமல் அரசியலில் எல்லாவிதமான சூழ்ச்சிகளை முறியடித்து பதவிகளைப் பெற முயற்சி செய்வார்கள். இந்த பதவிகளைப் பெறுவதற்கு கட்சித் தலைமை எதிர்பார்க்கும் ஒரே விஷயம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்பதைத்தான்.
அத்தோடு அவர்கள் தலைமையின் கீழ் இயங்கும் கட்சியினரையும் தேர்தலில் வெற்றி பெற வைத்தால் அவர்கள் எதிர்பார்க்கும் பதவி தானாக அவர்களுக்கு கிடைத்து விடும். சமீபத்தில் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்த கே.என்.நேரு திருச்சி மாநகரில் 14 ஒன்றியங்களில் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் பலனாகவே திமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பை பெற்றார். இதைப்போன்று கரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக இருந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
காரணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தாந்தோணி ஒன்றிய செயலாளராக பணியாற்றியவர். தாந்தோணி ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். செந்தில்பாலாஜியின் அணி மாற்றம் விஜயபாஸ்கருக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. அதை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் ஏரியாவில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக கைப்பற்றியது. மாவட்ட கவுன்சிலர் பெரும்பான்மை இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. இந்த 100% வெற்றியால் கரூர் மாவட்ட செயலாளர், கட்சியில் மாநில பதவி கிடைத்தது.