காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்திய ஒற்றுமைப்பயணம் என அழைக்கப்படும் இந்தப் பயணம் கடந்த புதன் கிழமையன்று தொடங்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி இந்த யாத்திரையை தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் இந்தப் பயணமானது 150 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, நேற்று மாலை கேரளா எல்லையில் நுழைந்தார். முன்னதாக, தமிழ்நாடு எல்லையில் பேசிய அவர், “இந்தப் பயணத்தில் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. இந்தியாவை ஜாதி, மத, மொழி அடிப்படையில் பாஜக பிளவுபடுத்தி வருகிறது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிரதமர் மோடி நன்மை செய்கிறார். ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவருகின்றனர். இதற்கு முற்று புள்ளி வைக்கவே இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டுள்ளேன். நாராயண குருவும் பெரியாரும் ஏழை மக்களுக்கு உழைத்தவர்கள். பெரியார் மண்ணைவிட்டு கிளம்புவது அளிக்கிறது” எனக் கூறினார்.